உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற வீரர்களுக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், , ஒன்றிய குழு உறுப்பினருமான பாரப்பட்டி சுரேஷ் குமார், மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். அருகில் சிவம் சிலம்பம் அறக்கட்டளை தலைவர் வி.மதையான் உள்ளார்.

சிலம்ப போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

Published On 2022-12-26 07:41 GMT   |   Update On 2022-12-26 07:41 GMT
  • தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. 2-வது நாளான இன்று ஒற்றை கம்பு, தொடுமுறை உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
  • இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

பனமரத்துப்பட்டி:

மல்லூர் சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் சிவம் சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சியகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. 2-வது நாளான இன்று ஒற்றை கம்பு, தொடுமுறை உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக 5 கிராம் வெள்ளியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக தலா 4 கிராம் வெள்ளி, 3 கிராம் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது.

பரிசுகளை சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், , ஒன்றிய குழு உறுப்பினருமான பாரப்பட்டி சுரேஷ் குமார், மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் ஆகியோர் வழங்கினர். சிவம் சிலம்பம் அறக்கட்டளை தலைவர் வி.மதையான் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

Tags:    

Similar News