உள்ளூர் செய்திகள்

போலீஸ் பாதுகாப்புடன் கிராமசபை கூட்டம் நடந்தது.

பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன்நடந்த கிராம சபை கூட்டம்

Published On 2023-10-03 04:17 GMT   |   Update On 2023-10-03 04:17 GMT
  • பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தால் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் தீர்மான நகலை வாசித்தார்.

அப்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள், கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் நடைபெற்ற பணிகள் விவரங்களை கேட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம், வார்டு உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒருதரப்பினரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தகவல் அறிந்து செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானம் செய்தனர். வார்டு உறுப்பினர்கள் தரப்பில் கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தாங்கள் புறக்கணித்து செல்வதாக கூட்டத்தில் இருந்து திடீர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு இடையில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற திட்டப்பணிகளை தலைவர் காளிதாஸ் தெரிவித்தார். அப்போது புதுகாமன்பட்டியை சேர்ந்தவர் ஒருவர் தனிநபர் ஒருவரிடம் வார்டு உறுப்பினர்கள் ரூ. 10 ஆயிரம் பெற்றுக்கொண்டு தனக்கு சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க ஆதரவாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

இதனால் வார்டு உறுப்பினர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

Tags:    

Similar News