பரமத்தி வட்டார விவசாயிகளுடன் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு ஆலோசனை
- வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
- வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார்.
விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பி.பி.தனராசு தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும். பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கம–ளிக்கப்பட்டது.
வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளும் மானியத் திட்டங்கள். தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்ப–டும் திட்டங்கள் மற்றும் மானியங்கள். கால்நடை பராமரிப்புப்துறையின் மூலம் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் அதற்காக வழங்கப்படும் மானியங்கள். பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மானியங்கள், இடுபொருள் குறித்தும், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானி–யத்திட்டங்கள், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, கால்நடை உதவி மருத்துவர் நளினி, பட்டு உதவி ஆய்வாளர் கோமதி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சற்குணம் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் அட்மா திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் விபரங்களையும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோச–னைக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.