உள்ளூர் செய்திகள் (District)

தருமபுரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டிடம் மனு தர வந்த ஊராட்சி செயலாளர்கள்.

பெண் கவுன்சிலரின் கணவர் கொலை வெறி தாக்குதல்: ஊராட்சி செயலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற நடவடிக்கை எடுக்க மனு

Published On 2022-11-23 09:50 GMT   |   Update On 2022-11-23 09:50 GMT
  • தகாத வார்த்தை களால் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
  • மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசரஹள்ளி ஊராட்சியில் ராமதாஸ் என்பவர் ஊராட்சி செயலாளராக இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 17-ம் தேதி காலை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது தாசர ஹள்ளி ஊராட்சியை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினரின் கணவரான அம்மாசி என்பவர் ஊராட்சி அலுவலகத்தில் நுழைந்து ஊராட்சி செயலாளர் ராமதாசை தகாத வார்த்தை களால் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை அலுவலகத்தின் உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டு சென்று விட்டதாகவும் தெரிகிறது.

இந்த தாக்குதல் குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

மேலும் இந்த கொலைவெறி தாக்குதலால் ஊராட்சி செயலாளர்கள் அலுவலகங்களில் பணி செய்ய முடியாத சூழல் உள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து ஊராட்சி செயலர்களுக்கு அச்சத்தை போக்கி மீண்டும் பணி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரி வித்துள்ளனர்.

மேற்கு மண்டல தலைவர் செல்வம், மாநில இணை செயலாளர் சர வணன், மாநில துணை தலை வர் திரு வருட் செல்வன், மாவட்ட தலைவர் முத்து மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.

Tags:    

Similar News