ராதாபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்த பெண்கள்- பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- ராதாபுரம் யூனியனில் கடலோர பகுதியில் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்துக்கு உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுனாமி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
- இங்கு வசிக்கும் மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
திசையன்விளை:
ராதாபுரம் யூனியனில் கடலோர பகுதியில் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்துக்கு உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுனாமி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக இந்த காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக வரவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி அன்று அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதனையறிந்த குடிநீர் வழங்கல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் கடந்த மாதம் 23-ந்தேதி சுனாமி காலனிக்கு சென்று அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் அந்த பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ஆனால் அதிகாரிகள் கூறியபடி குடிதண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீரென காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கரைசுத்து உவரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உவரி ராஜன் கிருபாநிதி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள்