உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது என்று கூறியதால் பெண்கள் முற்றுகை போராட்டம்

Published On 2023-10-05 09:39 GMT   |   Update On 2023-10-05 09:39 GMT
  • அ.தி.முக. ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது கன்று கூறியதால் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தாசில்தார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு ட்பட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலனவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 1500 ஏழைகளுக்கு பாலக்கோடு அருகே கூசுக்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆட்சி மாறியதால் வழங்கிய பட்டாக்களுக்கு இடத்தை ஒதுக்காமல் பொது மக்களை அதிகாரிகள் அலைகழித்து வந்தனர்.

இந்நி லையில் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் சென்ற பெண்கள் சிலர் குடி இருக்க இடமில்லை, வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. எனவே பட்டா இடத்தை அளந்து வழங்குமாறு கேட்டனர். ஆனால் அதிகாரிகள் கடந்த ஆட்சியில் வழங்கிய பட்டா செல்லாது என தெரிவித்தனர். இத்தகவல் காட்டு தீயாக பரவியதால் பெண்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கினர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்து முற்றுகையில் ஈடுபட்டு தங்களுக்குரிய வீட்டு மனைகளை அளந்து இடத்தை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையறிந்த தாசில்தார் ராஜா அடுத்த மாதம் பட்டா வழங்கிய இடத்தை அளந்து இடம் ஒதுக்கீடு செய்து தர ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார். அதனை தொடர்ந்து பெண்கள் திரும்பி சென்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா செல்லாது என்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News