மகளிர் உரிமைத்தொகை திட்டம்- கோவையில் 1.56 லட்சம் குடும்பத்தினர் விண்ணப்பம் பெறவில்லை
- விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை விண்ணப்பம் வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
- மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார்
கோவை,
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.
இதற்காக கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று படிவம் வழங்கி பூர்த்தி செய்து, திரும்ப பெற்று இந்த திட்டத்துக்கென வடிவமைத்துள்ள மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,401 ரேஷன் கடைகளில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
839 கடைகளுக்கு உட் பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 கார்டுதாரர்கள் விண்ணப்பம் பெற்று கொண்டனர்.
அதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 விண்ணப்பம் பெறப்பட வில்லை.
மீதமுள்ள 562 கடைக ுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இந்த கடைகளில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். இவர்களிலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள், விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தி ருக்கின்றனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பம் வழங்க வில்லை.
இரு முகாம்களிலும் சேர்த்து 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்க வில்லை.
இவர்களுக்காகவே விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 குடும்பத்தினர் விண்ணப்பமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார். விடுபட்டோருக்கு நடத்தப்படும் சிறப்பு முகாமில் கூடுதல் விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் பூர்த்தி செய்து திரும்ப பெற்றுள்ள விண்ணப்பங்கள் அதிகம். ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருவாய் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.