திசையன்விளை அருகே பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியால் தொழிலாளி தற்கொலை
- ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டைகருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
- தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் வடிவம்மாள்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது 42). தொழிலாளி.
இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாாரித்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது முருகன் கோட்டை கருங்குளம் பஞ்சாயத்து தலைவர்பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதற்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்த முடியாததால் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடன்பிரச்சினை காரணமாக முருகனை அவரது மனைவி திரவுபதி பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாழ்வில் வெறுப்படைந்த முருகன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.