தோட்டக்கலைத்துறை வயலை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்
- 0.80 எக்டர் செடி முருங்கை சாகுபடி செய்வதற்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
- கால்நடை பராமரிப்பு நிபுணர் மனோகரன், செயற்பொறியாளர் சுப்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
தஞ்சாவூர்:
உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட த்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செடி முருங்கை பரப்பு விரிவாக்கம் இனத்திற்கு புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி வேம்பரசி என்பவருக்கு 0.80 எக்டர் செடி முருங்கை சாகுபடி செய்வதற்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வேம்பரிசியின் விவசாய வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் சாஜன் கொரியன் (உணவு மற்றும் விவசாய அமைப்பு), தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யாசாகர், வேளாண்மை நிபுணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர் ராஜேந்திர பாண்டியன், கால்நடை பராமரிப்பு நிபுணர் மனோகரன், செயற்பொறியாளர் சுப்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் தஞ்சாவூர் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ் செல்வி, துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமரன், உதவி அலுவலர்கள் ரகுபதி, கரிகாலன், ராஜேஷ் கண்ணன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.