உள்ளூர் செய்திகள்

நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு படித்து அரசு துறைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக நாள் நிறைவு விழா

Published On 2023-04-30 09:32 GMT   |   Update On 2023-04-30 09:32 GMT
  • 8 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
  • கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற வாசக–ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23ஆம் தேதியிலிருந்து இன்று வரை 8 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. வாசகர்களுக்கான கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. மேலும் புத்தக கண்காட்சியும் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று உலகப் புத்தக நாள் நிறைவு விழா நடைபெற்றது.

பேராசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் முத்து, வாசகர் வட்ட தலைவர் கோபால கிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் இசையில் இலக்கியம் குறித்து கவிஞர் சாமி மல்லிகா பேசினார். திருக்குறள் குறித்து குறள் நெறி செம்மல் கந்தசாமி, சிலப்பதிகாரம் பற்றி கவியருவி வல்லம் தாஜுபால், பெரியபுராணம் பற்றி நல்லாசிரியர் புகழேந்தி, குற்றால குறவஞ்சி குறித்து நல்லாசிரியர் அல்லி ராணி, இயேசு காவியம் பற்றி கவிஞர் டொமினிக் சேகர், காத்திருங்கள் காதலிப்போம் குறித்து பன்முக கவிஞர் ராகவ் மகேஷ் பேசினர்.

தொடர்ந்து விழாவில் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்விற்கு படித்து தற்போது அரசு துறையில் பணியாற்றி வருபவர்களை மராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களை எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. வழங்கினார் . இதே போல் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற வாசக–ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் கூடுதல் துணை தலைவர் முத்தையா நன்றி கூறினார்.

Tags:    

Similar News