உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம்
- உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
- கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் வட்டார வேளாண்மை துறையின் மூலம் உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது. கருங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் ருக்கு சத்யா தலைமை தாங்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆமினி தென்னை மரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
தேங்காய் உற்பத்தியை அதிகப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டிற்கு இனகவர்சி பொறியின் பயன்பாடு, நீர் மேலாண்மை, வறட்சி காலத்தில் தென்னையில் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு, ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலுக்கு கண்ணாடி இறக்கை பூச்சி ஒட்டுண்ணியின் பயன்பாடு, உர மேலாண்மை, தென்னை நுண்ணூட்ட உரம், தென்னை மரக்கன்று சாகுபடி, தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் உற்பத்தி, தென்னையில் ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார். முகாம் ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் திரிசூலம் ஏற்பாடு செய்திருந்தார்.