உள்ளூர் செய்திகள்

பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.

உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-16 10:16 GMT   |   Update On 2023-11-16 10:16 GMT
  • 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை மருத்து வக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராமசாமி, துறைத்தலைவர் மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன், மருத்துவத்துறை தலைவர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று முகப்பு பகுதியில் நிறைவடைந்தது.

பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முதல்முறையாக முன்னோடி திட்டமாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சேவைகள் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் 85 சதவீதம் பேருக்கு நோய் முற்றிய நிலையில் கால் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாதம் ஒருமுறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டாக்டர்கள் பங்கேற்கும் பாத நோய் அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் கவனம் செலுத்தினால் கால் அகற்றப்படுவதில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்றார்.

Tags:    

Similar News