உலக சுற்றுசூழல் தின விழிப்புணர்வு போட்டி
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
- பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப்படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி யின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளைசேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டியானது பல சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு 7 மாணவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ முதல் பரிசினையும், ராஜன் கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி சஞ்சிதா இரண்டாம் பரிசினையும், திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விசுவநாதன் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கு ஆஸ்பயர் அகாடமியின் நிறுவனர் பரணிதரன் தலைமை தாங்கினார். நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார். நாளை அமைப்பின்ஒருங்கி ணைப்பாளர் செகுரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.