உள்ளூர் செய்திகள்

2-வது முறையாக எரி பொருள் நிரப்புவதற்கு உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் 'ஏர் பஸ் பெலுகா' சென்னை வந்தது

Published On 2023-07-25 09:50 GMT   |   Update On 2023-07-25 09:50 GMT
  • ஓரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது.
  • உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா"என்ற சரக்கு விமானம், சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது.

இந்த விமானம் குஜராத் தில் இருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி, எரி பொருள் நிரப்பியது.

இந்த சரக்கு விமானம் ஓரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது. உலகிலேயே மிகப்பெரிய "ஏர் பஸ் பெலுகா" சரக்கு விமானம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி, இதைப்போல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்து, எரிபொருள் நிரப்பியது. பின்னர் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது.

தற்போது 2-வது முறையாக மீண்டும் அதே ஜூலை மாதம், உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News