உள்ளூர் செய்திகள்
ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம்
- ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
- ஏற்காடு அடிவார பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக புகார் எழுந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தனியார் எஸ்டேட்களில் இருந்து பல வகை மரங்களை வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தது. மலைப் பாதை வழியே மர லோடு ஏற்றி வரும் லாரிகளை சோதனையிட அடிவாரப்பகுதியில் வனத்து றையின் சோதனைச்சாவடி இருக்கிறது.
இங்கு பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக கூறப்படுகிறது.
இது பற்றி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ஏற்காடு அடிவார சோதனைசாவடியில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் புகழேந்தியை அஸ்தம்பட்டி சந்தன மர குடோனுக்கு அதிரடியாக இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். அேதபோல் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் அசோகனை ஏற்காடு சோதனைசாவடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.