கோவையில் நேற்று ஒரே நாளில் கஞ்சா-குட்கா விற்ற 5 பேர் கைது
- 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை புறநகர் போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலை கிராமங்களில் கஞ்சா செடிகளை கண்டு பிடித்து அளித்தனர்.
கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை - மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பெரியநாயக்கன் பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அந்த வாலிபரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும் அவர் கோவை குனியமுத்தூர் பகுதயில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதேபோன்று பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் சமத்தூர் மணல்மேடு பகுதியில் தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட திண்டுகல்லை சேர்ந்த ரவி என்பவரை கோட்டூர் போலீசார் பிடித்தனர். ஆைனமலை பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற திண்டுகல்லை சேர்ந்த மனோஜ்குமார் (27) என்பவரை ஆைனமலை போலீசார் பிடித்தனர். இதையடுத்து கோட்டூர் மற்றும் ஆைனமலை போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை செட்டிப்பாளையத்தில் பெட்டி கடையில் குட்கா விற்ற ராஜன் (57) மற்றும் மலுமிச்சம்பட்டியில் மளிகை கடையில் குட்கா விற்ற சிங்கமுத்து (53) என்பவரை செட்டிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று அன்னூர் கனேசபுரத்தில் ஒரு கடையில் 5 கிலோ 400 கிராம் குட்காவை பதுக்கி வைத்து விற்ற செல்லதுரை (41) என்பவரை அன்னூர் போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவையில் நேற்று ஒரே நாளில் கஞ்சா-குட்கா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.