உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் கூத்தரசன், துணை முதல்வர் மஞ்சுளா தலைமையில் கேடயமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

ஓசூரில் நடந்த யோகா போட்டியில் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-12-04 09:19 GMT   |   Update On 2022-12-04 09:19 GMT
  • யோகாவிற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
  • பதக்கங்களை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் பெற்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் கடந்த மாதம் 23-ம் தேதி யோகாவிற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் 55 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.முதல் கட்டப்போட்டியில் நடனத்துடன் கூடிய யோகா முறையில் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

"சாம்பியன் ஆப் சாம்பியன்" என்ற பதக்கங்களை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் பெற்றனர். "காமன் ஆசனாஸ்" என்ற யோகாவிற்கு பதக்கமும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் மற்றும் துணை முதல்வர் மஞ்சுளா தலைமையில் கேடயமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி மாணவர்களை கவுரவப்படுத்தினர்.

Tags:    

Similar News