உள்ளூர் செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகாசன தினம்

Published On 2023-06-24 06:58 GMT   |   Update On 2023-06-24 06:58 GMT
  • என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகாசன தினம் கொண்டாடப்பட்டது.
  • பள்ளி மாணவிகளுக்கு யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

 கடலூர்:

நெய்வேலி புதுநகர் 11-வது வட்டம் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. நெய்வேலிஎன்.எல்.சி. பள்ளிகளின் கல்வித் துறை செயலாளரும்,பொது மேலாளருமான நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். என்எல்சி பொது மருத்து வமனையின் முதன்மை பொது கண்காணிப்பாளர் டாக்டர் தாரணி மவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உடல் நலனை பேணுவதில் யோகா சனத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளுக்கு கூறினார். நெய்வேலி அறிவு திருக்கோவில் அணியின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மாணவிகள் யோகாசனப் பயிற்சிகளை செய்தனர்.

Tags:    

Similar News