திருக்குறுங்குடி அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி
- ஆரம்ப சுகாதார மையத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக யோகா தியான பயிற்சி நடைபெறுகிறது.
- யோகா பயிற்சிகளை ஆசிரியர்கள் அருள்நிதி வெங்கடேஷ், அருள்நிதி ராமலெட்சுமி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடி:
தினமும் யோகா பயிற்சியின் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் திருக்குறுங்குடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக யோகா தியான பயிற்சி நடைபெறுகிறது. அரசு சுகாதார மையத்தில் நடக்கும் பயிற்சியில் பொதுமக்களும், புறநோயாளிகம் கலந்து கொள்கின்றனர்.
இவ்வகையான பயிற்சியில் அருட்காப்பு சங்கல்பம், நாடிசுத்தி பிராணாயாமம், சுவாச பயிற்சிகள், கால்வலி நிவாரண பயிற்சிகள், இடுப்பு பயிற்சிகள், ரெண்டொழுக்கப் பண்பாடு, உலகை வாழ்த்துதல் மற்றும் பல்வகையாக பயிற்சியினால் ஆரோக்கியமான உடலையும், நீண்ட ஆயுளையும் பெற முடியும் என பயிற்சி வல்லுனர்கள் தெரிவித்தனர். யோகா பயிற்சியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கர்ப்பணி பெண்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பவ்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். ஆயூஷ் சித்த மருத்துவ உடல்நல மையத்தின் சார்பில் நடைபெற்று வரும் யோகா பயிற்சிகளை ஆசிரியர்கள் அருள்நிதி வெங்கடேஷ், அருள்நிதி ராமலெட்சுமி ஆகியோர் நடத்தி வருகின்றனர். பயிற்சியின் மூலமாக இறையாற்றலும், புத்துணர்வும் கிடைக்க பெறுவதாக அதில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.