குழந்தை தொழிலாளர், கொத்தடிமை ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம்
- கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
- கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்பினை சிறப்பாக நடைமுறைபடுத்திடும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பிஎஸ்என்எல் மூலம் 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் , கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாரர்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.