கோவை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
- கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
- கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள எம்.ராயர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கனகதாரணி (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகதாரணி தனது கணவரை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் கனகதாரணியை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் உடல் கருகி இறந்தார்.
இந்த தகவல் கிடைத்தும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தற்கொைல செய்து கொண்ட கனகதாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.