வடபழனியில் எலக்ட்ரீசியன் கொலையில் வாலிபர் கைது
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்தபோது ஜேம்ஸ் - ராஜ்குமார் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
- காயமடைந்த ராஜ்குமார் ஜேம்சை பழி வாங்க சமயம் பார்த்து காத்து இருந்தார்.
போரூர்:
சென்னை வடபழனி, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 63) எலக்ட்ரீசியன்.
இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதி 100 அடி சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு முகம் சிதைந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஜேம்சை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தாக்கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்தபோது ஜேம்ஸ் ராஜ்குமார் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜேம்ஸ் உருட்டுக்கட்டையால் ராஜ்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ராஜ்குமார் ஜேம்சை பழிவாங்க சமயம் பார்த்து காத்து இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜேம்ஸ் மதுபோதையில் படுத்து கிடந்ததை கண்ட ராஜ்குமார் அவரை அருகில் கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கி துடிக்க துடிக்க கொலை செய்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.