சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
- உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 33). இவர் நேற்று மாலை உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமஜெயம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து, அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேக்கலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.