உள்ளூர் செய்திகள்

இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-01-19 09:57 GMT   |   Update On 2023-01-19 09:57 GMT
  • விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் தர்மபுரி விஜயா அழைப்பு விடுத்துள்ளார்.
  • தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் கிராமப்புர இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வரவும்.

தருமபுரி,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 'அங்கக வேளாண்மை' என்ற தலைப்பில் 20 விவசாயிகளுக்கு 30.01.2023 முதல் 20.02.2023 வரை 15 நாட்களுக்கு (120 மணி நேரம்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே 5-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஆர்வமுள்ள ஊரக விவசாய இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேளாண்மை இணை இயக்குநர் தர்மபுரி விஜயா அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் கிராமப்புர இளைஞர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் நகல், கல்விமாற்றுச் சான்றிதழ் மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் பயிற்சி நிலையத்தில் 25.01.2023- க்குள் விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குநர், விஜயா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News