உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகரில் வாகன ஓட்டுநர்களிடம் அடாவடியாக பணம் வசூலில் ஈடுபடும் வாலிபர்கள்

Published On 2023-05-03 09:30 GMT   |   Update On 2023-05-03 09:30 GMT
  • கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
  • தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.

கடலூர்:

கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.  4 மணி நேரமும் வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரும் நிலையில் பணம் வசூலிக்கும் வாலிபர்கள் வாகன டிரைவர்களிடம் சீட்டு வழங்கி அதற்கான கட்டண தொகை வசூல் செய்கின்றனர். கட்டணம் வசூல் செய்யும் வாலிபர்கள் அடாவடியாக வாகன ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடா வடியாக வசூல் செய்யும் வாலிபர்களிடம் ஏன்? இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள், பணம் கேட்டால் கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் வேலை பளு காரணமாக சில நிமிடங்கள் காலதாமதமானால் இது போன்ற அடாவடியாக வசூல் செய்வதால் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொ டர்ந்து அடாவடிப்போக்கில் கட்டண வசூல் செய்வதால் நாளடைவில் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் தகராறாக மாறி கடும் பாதிப்பை ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகின்றது. இது சம்பந்தமாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி, கட்டணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஒழுங்கான முறையில் பணம் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து அதிகரித்தால் வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News