உள்ளூர் செய்திகள்

வேளாண் வளர்ச்சி திட்ட பகுதிகளை மண்டல அலுவலர் ஆசீர் கனகராஜன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

நெல்லையில் வேளாண் வளர்ச்சி திட்ட பகுதிகளை மண்டல அலுவலர் ஆய்வு

Published On 2022-10-08 09:49 GMT   |   Update On 2022-10-08 09:49 GMT
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 56 கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
  • ஆய்வு கூட்டம் மண்டல அலுவலர் ஆசீர் கனகராஜன் தலைமையில் நடைபெற்றது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 35 பஞ்சாயத்துக்களிலும் 2022-23-ம் ஆண்டில் 56 கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிகளை ஆய்வு செய்திட வேளாண்மை இணை இயக்குனர், நெல்லை மாவட்ட அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் மண்டல அலுவலர் ஆசீர் கனகராஜன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மானூர் வட்டாரம் சேதுராயன்புதூர் தரிசு நில தொகுப்புகளை மண்டல அலுவலர் பார்வையிட்டார்.

மதவக்குறிச்சியில் கலைஞர் திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் தோட்டக்கலை மூலம் வினியோகிக்கப்பட்ட பழமரங்கன்றுகளை ஆய்வு செய்தார்.

மேலும் இலந்தைகுளம் கிராமத்தில் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயன்அடைந்த விவசாயி களுக்கு இடுபொருட்களை வழங்கினார். தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகமான கருங்குருவை விதைகள் மற்றும் உளுந்து வரப்பு பயிர் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். உக்கிரன்கோட்டை தரிசு நிலத் தொகுப்பினை ஆய்வு செய்தார்.

வேளாண்மை பொறி யியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஊரணி தூர்வாருதல் பணிகள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் பாரத பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் ராமையன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணை பிழியும் கருவியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்புடன் இத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட ஆலோசனையும் வழங்கினார்.

ஆய்வின்போது நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அசோக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குனர் சுந்தர் டேனியல் பாலஸ், விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பூவண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், விதைச்சான்று உதவி இயக்குனர் ரொனால்டு ரமணி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிருபா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News