உள்ளூர் செய்திகள் (District)

வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி

Published On 2022-07-06 08:16 GMT   |   Update On 2022-07-06 08:16 GMT
  • வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி நடைபெற உள்ளது.
  • அமைச்சர் தொடங்கிவைக்கிறார்

புதுக்கோட்ைட:

புதுக்கோட்ைட மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு நேசிய அள விலான வாலிபால் போட்டி வரும் 8-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. போட்டியை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைக்க உள்ளார்.

வடகாடு காவல் நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் இரவு நேரத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் ஆண் மற்றும் பெண் என இரு பிரிவாக அணிகளாக கலந்துகொள்ள உள்னனர்.

அதில் ஆண்கள் பிரிவில் கேரளா காவல்துறை சென்னை எஸ்ஆர் எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூரு அணி ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கே எஸ் இ பி அணி, கேரளா காவல்துறை, சென்னை எஸ் ஆர் எம், சென்னை ஐ சி எப் ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன

போட்டியை ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு வருகிறது. மைதானத்தில் இரவை பகலாக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட அதிக ஒளி உமிழும் மின்விளக்கு கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர வாகனங்களை நிறுத்துவத ற்காக ஆங்காங்கே வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை போட்டி நடைபெறும். அண்ணா கைப்பந்து கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவாக நடைபெறும் இந்த போட்டியை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையா ட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.

மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமை ச்சர் எஸ் .ரகுபதி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

வெற்றி பெறும் அணியினரு க்கு ரொக்க பரிசு, அண்ணா கைப்பந்து கழகத்தின் மறைந்த வீரர்களின் நினைவாக பரிசு கோப்பை ஆகியன வழங்கப்பட உள்ளன. போட்டிக்கான முன்னேற்பாடுகளை அண்ணா கைப்பந்து கழகத்தினால் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News