null
- சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன.
- சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.
பள்ளுதல் = என்றால் தோண்டுதல்.
பள்ளப்பட்ட இடமே - பள்ளம்.
ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) ஆழமாக, பெரிதாகத் தோண்டினால் பள்ளம். குறைவான ஆழத்தில் சிறிதாகத் தோண்டியது பள்ளி(ல்).
'பள்ளு' இலக்கியம் கேள்விப்பட்டிருப்பீரகள்! வயலைப் பள்ளமிட்டுப் ( ஆழ உழுது) பயிர்த் தொழில் புரிந்த உன்னத மாந்தர்கள் ( பள்ளர்) உருவாக்கியது அந்த இலக்கியம்! அவர்கள் கற்பனைத் திறனும் இசையறிவும் மிக்கவர்கள் கூட! இவர்கள் இசைத்துக் கொண்டே இலக்கியமும் படைத்து, பசியாற உணவும் உண்டாக்கியதால், இந்த இலக்கியம் அவர்கள் பெயராலேயே, 'பள்ளு' எனப்பட்டது.
படு / படுப்பது என்ற வினைச்சொல்லும் பள் - என்ற மூலத்திலிருந்து உருவானதே. பள்ளப்பட்ட இடத்தில் இரவினில் உடலைச்சாய்த்து ஓய்வெடுப்பதே - படுத்தல் என்ற வினையானது.
படுத்தல் = கீழாதல், விழுதல், கிடத்தல், தூங்குதல்.
படுக்கை = கீழ் மட்டத்தில் உள்ள இடம்;
தாழ்வான இடம்.
பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள்.
பள்ளியெழுச்சி = படுக்கை விட்டு எழுந்திருத்தல்.
சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.
(உதா: குராப்பள்ளி, சிராப்பள்ளி).
பல நீதி நூல்களை சமணர்கள் இப்பள்ளிகளிலிருந்தே படைத்தனர். இந்தச் சமயப் பள்ளிகளில் பின்னர் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டதால் - கல்விச் சாலைகள் பள்ளி, பள்ளிக்கூடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டன.
-யாகோப்பு அடைக்கலம்