- அஞ்சறைப் பெட்டியில் தீராத அரியநோய் எதுவும் ஆஸ்பத்திரியில் போய் தீர்ந்ததாய் வரலாறு இல்லை...!
- வாழைப் பழத்தைபோல் வைத்தியனைப் பார்த்தது யார்...?
வைத்தியனுக்கு
கொடுப்பதை
வணிகனுக்கு கொடுத்துப்பார்
வாழ்க்கை வளமாகும்...!
அஞ்சறைப் பெட்டியில் தீராத
அரியநோய் எதுவும்
ஆஸ்பத்திரியில் போய்
தீர்ந்ததாய் வரலாறு இல்லை...!
முந்திரியும் திராட்சையும்
முற்றிய பாதாம் பருப்பும்
நித்தம் ஒருமுறை
நிதானமாய் கொஞ்சம்
மென்று சாப்பிட்டுப்பார்
மேனி வளமாகும்
மின்னுகிற உடலாகும்...!
தேனைத் தினந்தோறும்
தேக்கரண்டி சுவைத்துப்பார்
தேகம் குளிர்ந்து போகும்
தெளிந்த ஞானம் உதயமாகும்...!
ஆரஞ்சும் எலுமிச்சையும்
இன்னபிற கனிச்சரக்கும்
உன் சாப்பாட்டு மேஜையின்மேல்
ஓரமாய் வைத்துப்பார்
ஓடிப்போகும் நோயெல்லாம்...!
வாழைப் பழத்தைபோல்
வைத்தியனைப் பார்த்தது யார்...?
கீரைக்காரியோடு
கலகலப்பாய் பேசிப்பார்
கேட்டவரம் கொடுப்பாள்
கீழ்வாதமும் குணமாகும்...!
காய்கறிகளுக்கு
நீ செய்யும் செலவுகளால்
உன் கடைசிக்காரியம்
பலவருடங்கள் தள்ளிப்போகும்
வைத்தியனுக்கு கொடுத்து
வதைபட்டு சாவதை விட
வணிகனுக்குக் கொடுத்து
வாய்நிறையத் திண்றுபார்
வாழ்ந்திடுவாய் நூறாண்டு...!
-கோடாங்கி