- செஞ்சி பார்த்துட்டு உண்மையிலேயே ஆம்லெட் டேஸ்ட்ல இருந்துச்சான்னு சொல்லுங்க...
- சுவையான ‘சைவ ஆம்லெட்’ ரெடி.
ஆம்லெட்னாவே அசைவம்தான. அதென்ன சைவ ஆம்லெட்னு கேட்க தோணுதா..? அந்த கதையை ஏன் கேட்கறீங்க... அசைவத்துல நாம வித விதமா செஞ்சி சாப்பிடறத பார்த்து பொறாமைல பொங்கி எழுந்த குரூப் ஒன்னு உருவாக்குனதுதான் இந்த சைவ ஆம்லெட்...
உங்களுக்கு இந்த சைவ ஆம்லெட் எப்படி செய்யறதுன்னு சொல்றேன். செஞ்சி பார்த்துட்டு உண்மையிலேயே ஆம்லெட் டேஸ்ட்ல இருந்துச்சான்னு சொல்லுங்க...
தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
மக்காச்சோளம் - 50 கிராம்
முழு கோதுமை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கோங்க..
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்தனியா வறுத்து கொரகொரப்பா அரைச்சுக்கோங்க..தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நல்லா கரைச்சுக்கோங்க..
நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு எல்லாத்தையும் கரைச்ச மாவுடன் சேர்த்து ஆம்லெட் மாதிரி தோசைக்கல்லில் ஊத்தி , வேக வைத்து எடுத்தா சுவையான 'சைவ ஆம்லெட்' ரெடி.
-ராஜேஷ் குமார்