கதம்பம்

மூட்டுவலிக்கு காரணம்..

Published On 2024-09-27 08:15 GMT   |   Update On 2024-09-27 08:15 GMT
  • பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும்.
  • எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருளில் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid).

ஒரு பொருளில் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline).

நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!

ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.

அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.

R.O. வாட்டர் - 5 - 6 pH அளவு.

காபி - 4.5 - 5.5 pH அளவு.

மண்பானை நீர் - 7- 8 pH அளவு.

Tags:    

Similar News