கதம்பம்

பல்லாக்கு வாங்கப் போனேன்..

Published On 2024-10-18 08:00 GMT   |   Update On 2024-10-18 08:00 GMT
  • மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.
  • மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இப்படி தான் பிறந்தது.

கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதை தெரிந்துகொண்ட கவிஞர், அதை தரவேண்டுமென்று விலையும் பேசி முடித்து விட்டார்.

முழு தொகையும் தர கண்ணதாசனிடம் பணமில்லை. அப்போது மூன்றில் ஒரு பங்கு பணம் தருவதாகவும், பின்னர் மீதியை விரைவில் தருவதாகவும் சொல்ல, நண்பரும் சரி என்று சொல்லிவிட்டார். மகிழ்ந்து போன கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே எண்ண துவங்கினார்.

அடுத்த நாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து கொள்ள எண்ணினார். இதற்கிடையே அந்த நண்பரிடம் சிலர் , 'கவிஞர் கடன் விசயத்தில் ரொம்ப மோசமென்றும், எனவே மீதி பணம் வருவது கஷ்டம்'என்றும் சொல்ல நண்பர் பீதியானார்.

அடுத்தநாள் காலை கவிஞர் வண்டியை எடுத்து வர ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குபோக, அந்த நண்பரோ அந்த கார் தனக்கு மிகவும் ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை' என்றும் சொல்ல, கவிஞர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

தான் மிகவும் விரும்பி தன்னுடயதாகவே எண்ணி இருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் இருந்தபோது அன்று மதியம் இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வரவிருந்த 'பணக்கார குடும்பம்' படத்துக்கு சோகப் பாடலின் பல்லவியை இப்படி எழுதினார். " பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" என்று. மெல்லிசை மன்னர்களின் இசையில் அமைந்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இப்படி தான் பிறந்தது.

-சந்திரன் வீராசாமி

Tags:    

Similar News