கதம்பம்

கைமேல் பலன்!

Published On 2024-10-24 09:56 GMT   |   Update On 2024-10-24 09:56 GMT
  • கைகளே, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு, ஆற்றல் மையமாக விளங்குகிறது.
  • ஆஸ்துமாவுக்கு ஒரு சிறந்த தீர்வை தரும்.

"கை தட்டுதல்" என்பது ஒரு சின்ன விடயம் தான். நாம் பிறரை உற்சாகப்படுத்த கைகளை தட்டுகிறோம். அவர் அந்த ஒலி அலைகள் மூலம் உற்சாகம் கொள்கிறார். ஆனால் நாம் நம் உடலில் தோன்றும் அதிர்வலைகளால் உற்சாகம் கொள்கிறோம்.

நாம் அடுத்தவர்களுக்காக கை தட்டும் அதே நேரம் நமக்காகவும் கொஞ்சம் கை தட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

சோர்வாக இருக்கும் பொழுதோ, மன அழுத்தம் உள்ள நேரங்களில் அல்லது தனிமை பொழுதுகளில் கை தட்டுதல் என்பது நம்மை நாமே தட்டி எழுப்பும் ஒரு செயல் மட்டுமன்றி நம் உடலில் பல நன்மைகளையும் செலவில்லாமல் செய்து விடுகிறது.

ஏனெனில் நமது கைகளில் அனைத்து உறுப்புக்களுக்குமான நரம்புகள் பின்னிக் கிடக்கின்றன. கைகளே, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு, ஆற்றல் மையமாக விளங்குகிறது. இவ்வாறு கை தட்டும் பொழுது முழு உடலும் நன்மை பெறுகிறது.

கை தட்டுவதால் இரத்த அழுத்தம் சீராகிறது.

ஆஸ்துமாவுக்கு ஒரு சிறந்த தீர்வை தரும்.

கால், கை, கழுத்து மற்றும் இடுப்பில் தோன்றும் மூட்டு வலிகளை நீக்கும்.

மூளைத்திறனையும், ஆற்றலையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிக உகந்தது.

மன அழுத்தம், பதற்றம், பயம், சோர்வு போன்றவை அகலும்.

தலைவலி நீங்கும்.

பார்வை கோளாறுகள் நீங்கும்.

முடி கொட்டுதல் பிரச்சனை நீங்கும்.

இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்பட்டு தூய்மை பெறும்.

உடலின் எதிர்ப்புசக்தி மேம்படுகிறது.

இரத்த அடைப்புக்கள் நீங்கும்.

முகம் பிரகாசமாகும்.

இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்புகள் விலகும்.

உணவு செரிக்காமை பாதிப்புகள் நீங்கும்

இப்படி கை தட்டுதலால் ஏற்படும் பலன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

Tags:    

Similar News