கதம்பம்
null

கணவன் ஈர்ப்பு சக்தி!

Published On 2024-10-27 11:15 GMT   |   Update On 2024-10-27 11:16 GMT
  • எல்லாம் எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என கேட்டாள்.
  • "நீங்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் சிந்தித்தீர்களா? அல்லது பிரிந்த பின்னால் சிந்தித்தீர்களா?" .

ஒரு முறை விஞ்ஞானி நியூட்டனிடம் ஒரு பெண்மணி வந்து, "மிஸ்டர் நியூட்டன் அவர்களே!, இந்த கண்டுபிடிப்புக்களை எல்லாம் எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என கேட்டாள்.

அதற்கு நியூட்டன் "இலகுவான விடயம், பூமியில் கீழே விழும் பொருட்கள் பற்றி சிந்திப்பதில் நான் தினமும் என் நேரத்தைச் செலவழித்தேன். அதனால் இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது" என்றார்.

அதற்கு அந்தப் பெண்மணி "நானும்தான் நாளாந்தம் பல மணிநேரம் சிந்திக்கிறேன், ஆனால் எதுவும் ஆகவில்லையே!" என்றாள்.

"நீங்கள் எது பற்றி சிந்திக்கிறீர்கள்?"

"என்னுடன் சண்டைபிடித்து, என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் கணவரைப் பற்றித்தான்!"

"நீங்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் சிந்தித்தீர்களா? அல்லது பிரிந்த பின்னால் சிந்தித்தீர்களா?" .

"பிரிந்த பின்னர்தான்"

"நீங்கள் பிரியும் முன்னர் உங்கள் கணவர் பற்றி சிந்தித்திருத்தால், அற்புதமான ஈர்ப்பு சக்தி விதியை கண்டுபிடித்திருப்பீர்கள்!" என்றார் நியூட்டன்.

-இம்ரான் பாரூக்

Tags:    

Similar News