கதம்பம்

அளவோடு இருத்தலே ஆரோக்கியம்

Published On 2024-10-29 17:30 GMT   |   Update On 2024-10-29 17:30 GMT
  • நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும்.
  • நமது இளமையைப் பாதுகாக்கிறது.

நாம் இன்று சாப்பிடும் உணவு இன்றிலிருந்து 70 ஆம் நாளில் விந்தாக மாறுகிறது. இந்த விந்து பெண்ணுக்கும் (சுரதோணியம்) உண்டு;

நமது உடலில் இருக்கும் எலும்பு மூட்டுக்களில் இந்த விந்துவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன; இந்த விந்துவை அளவோடு செலவழித்தால், நாம் ஆரோக்கியமாக வாழமுடியும்.

நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும். நமது வாழ்நாள் முழுக்கவும் மூட்டுவலி வராமல் வாழ முடியும்.

நமது உடலுக்கு எடையைத் தருவது இந்த வெள்ளை அணுக்கள்தான்;இந்த வெள்ளை அணுக்கள்தான் நமது உடலுக்குள் புகும் காய்ச்சல், தலைவலி முதலான சிறு உபாதைகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, அழிக்கிறது.

நமது முகத்தில் தேஜஸ்ஸைத் தருகிறது. நமது இளமையைப் பாதுகாக்கிறது; நமது ஆரோக்கியத்தோடு, செல்வச் செழிப்பையும் ஈர்த்துத் தருகிறது.

இதை நாம் எந்த அளவுக்கு அளவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது உடல்நலம் சிறக்கும்; அதன் மூலமாக நமது மனநலமும் சிறப்பாக இருக்கும்;

மனநலம் சிறப்பாக இருப்பின், நமது குடும்ப நலமும் வலிமையாக இருக்கும்;

குடும்ப நலம் சிறப்பாக இருந்தால், நமது வெளித் தொடர்புகளான பிற குடும்பங்களுடனான உறவுகள் சிறப்பாக மிளிரும்.

நமது உடலைப் பாதுகாத்து வரும் வெள்ளை அணுக்களை அளவுக்கு மீறி வீணாக்கினால், முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்; அத்துடன் அடிக்கடி வறட்டு இருமலும் உண்டாகும்.

இது நமக்கு மறைமுகமாக நமது உடலின் பாதுகாப்பு அமைப்பு விடும் எச்சரிக்கை ஆகும்

இந்த சேமிப்பு அளவுக்கு மீறும்போதுதான் நமது ஜாதகப்படி இருக்கும் தோஷங்கள், நவக்கிரகங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கத் துவங்கும்.

Tags:    

Similar News