கதம்பம்

படைத்தவன் நினைத்தாலும்...

Published On 2023-06-16 11:02 GMT   |   Update On 2023-06-16 11:02 GMT
  • எல்லா உயிர்களின் ஆயுளையும் ஓலைகளில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன்.
  • உள்ளே நுழைந்ததும் ஓர் ஓலை அறுந்து விழுந்தது. அது அந்த கிளியின் ஓலைதான்.

இந்திரன் மனைவி இந்திராணி. இவள் ஆசையாக ஒரு கிளி வளர்த்தாள். ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டது. உடனே இந்திரனிடம் சென்று, "கிளி இறக்கும் நிலையில் உள்ளது. அதை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்து விடுவேன்" என்றாள்.

உடனே இந்திரன், உயிர்களை படைக்கும் சிவனிடம் சென்று இதைப்பற்றி கூறினார். அதற்கு சிவன் உயிர்களை படைப்பது நான்தான். ஆனால் அதைக் காப்பது விஷ்ணுவின் தொழில். எனவே அவரிடம்சென்று முறையிடலாம் வா, நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்.

விஷ்ணுவிடம் நடந்ததை கூறினர்.. அதற்கு விஷ்ணு, உயிர்களை எடுப்பது பிரம்மனின் தொழில். எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள்.. நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்.

பிரம்மனிடம் நடந்ததை கூறினர். அதற்கு பிரம்மன், உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்துவிட்டேன். வாருங்கள் நானும் வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்.

நால்வருமாக சென்று நடந்ததை எமனிடம் கூறினர். எல்லா உயிர்களின் ஆயுளையும் ஓலைகளில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன். அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று அந்த உயிர் இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்.

உள்ளே நுழைந்ததும் ஓர் ஓலை அறுந்து விழுந்தது. அது அந்த கிளியின் ஓலைதான். அதை எடுத்து படித்தனர்.

அதில், "இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்ணு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும்" என்று எழுதியிருந்தது.

எனவே படைத்தவன் நினைத்தால்கூட ஆயுளை மாற்ற முடியாது. எனவே வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்.

-பிரேமலதா

Tags:    

Similar News