கதம்பம்

கண்ணீரில் பிறந்த தத்துவம்

Published On 2022-06-21 07:56 GMT   |   Update On 2022-06-21 07:56 GMT
  • உள்ளே நெருப்பையும் வெளியில் சிரிப்பையும் வைத்துக் கொண்டு கவியரசு எழுதிய பாடல் புகழ்பெற்ற பாடலானது.
  • கம்போஸிங்க் முடித்து வந்த கவியரசு ஒரு மார்வாடியிடம் பணம் வாங்கி வந்து, உடனே கோர்ட்டில் கட்டிவிட்டு ஜப்தியிலிருந்து வீட்டை மீட்டினார்.

பாவமன்னிப்பு படப் பாடல் கம்போஸிங்கில் கண்ணதாசன் அமர்ந்திருக்கிறார். சிவாஜி பாட வேண்டிய பாடலுக்கான சூழ்நிலையை சொல்கிறார் இயக்குநர் பீம்சிங். மெல்லிசை மன்னரும் டியூனை தயாராக வைத்துள்ளார். அப்போது ஒரு போன் கால் கண்ணதாசனுக்கு வருகிறது எழுந்து சென்று கவியரசு போனில் பேசுகிறார். பேசியவர் கவியரசுவின் கணக்காளர் ஒரு வருத்தமான செய்தியை கண்ணதாசனுக்கு சொல்கிறார்.

கவிஞர் அவர்களே... நீங்கள் தனியாரிடம் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய கோர்ட்டிலிருந்து தவாலி வந்து நோட்டீஸை ஒட்டி விட்டார்... வீதியெல்லாம் கேட்குமளவு தமுக்கடித்து கொண்டிருக்கிறார்கள். ஏதாவது வழி செய்யுங்கள்.

அதிர்ந்து போன கவியரசு அமைதியாக வந்து அமர்கிறார். கவியரசுக்கு ஏதோ மோசமான தகவல் வந்துள்ளது. அநேகமாக இன்று கம்போஸிங் இருக்காது என்று முடிவு செய்து அனைவரும் புறப்பட தயாராகின்றனர்.

ஆனால் கவியரசு, மெல்லிசை மன்னரிடம் "தம்பி..டியூனைச் சொல்"என்கிறார். எம்.எஸ்.வி.டியூனைச் சொல்கிறார். உடனே அருவி போல பாடல் வரிகளை சொல்கிறார்..

"சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்.."

அனைவரும் பாடலை பாராட்டுகின்றனர். உள்ளே நெருப்பையும் வெளியில் சிரிப்பையும் வைத்துக் கொண்டு கவியரசு எழுதிய அந்தப் பாடல் புகழ் பெற்ற பாடலானது.

கம்போஸிங்க் முடித்து வந்த கவியரசு ஒரு மார்வாடியிடம் பணம் வாங்கி வந்து, உடனே கோர்ட்டில் கட்டிவிட்டு ஜப்தியிலிருந்து வீட்டை மீட்டினார்.

கவியரசுவின் பல கண்ணீர் கதைகளிலிருந்துதான் நாம் கேட்டு ரசிக்கும் பல தத்துவப் பாடல்கள் உருவாயின.

-ஜெயதேவன்

Tags:    

Similar News