- நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.
- எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.
எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெருத் திண்ணையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு.
ஒரு நாள் பௌர்ணமி தினம் இரவு சுமார் மணி 12.30 இருக்கும். நல்ல நிலவு ஒளி. திண்ணையில் கால் பாகம் இருக்கிறது.
நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.
எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.
'நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கப் போகிறேனப்பா. இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே' என்று கூறிய வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்டேன். உருவமும் பார்த்தேன். அருள்பாலித்த உரையும் கேட்டேன். உடனே காட்சி மறைந்துவிட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.
என் மனைவியை எழுப்பிக் கூறி மகிழலாம் என்றால் பிறரிடம் அப்போதே கூறவும் கூடாது என்ற அருள் ஆணை.
என்ன செய்வேன். இருதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால் வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை.
அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயம்.
இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் என் எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்.
(அருள்தந்தை வாழ்க்கை குறிப்பிலிருந்து..ஆர்.எஸ். மனோகரன்)