மத்தியப்பிரதேசத்தில் 3 நாட்களில் 10 யானைகள் உயிரிழப்பு - வனத்துறையினர் தீவிர விசாரணை
- பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.
- யானைகள் உயிரிழந்தற்கான காரணம் புரியாமல் வனத்துறை அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் அடுத்தடுத்து 10 யானைகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 29 அன்று 4 யானைகளும், 30 அன்று 4 யானைகளும் 31 அன்று 2 யானைகளும் உயிரிழந்தன. யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்தற்கான காரணம் புரியாமல் குழம்பிய வனத்துறை அதிகாரிகள் யானைகளுக்கு பிரேத பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டனர். எனினும் சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
பூஞ்சை பாதித்த கருவரகை (Kodo millet) சாப்பிட்டதால் யானைகள் உயிரிந்ததா என்ற அச்சத்தில் அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவும் இதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 24 மணி நேரத்திற்குள் இந்து தொடர்பாக அறிக்கை சமர்பிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.