இந்தியா

மீண்டும் சதி: தண்டவாளத்தில் 10 கிலோ மரக்கட்டைகள்.. ரெயிலில் சிக்கியதால் பரபரப்பு

Published On 2024-10-26 05:02 GMT   |   Update On 2024-10-26 06:31 GMT
  • ரெயிலின் இரும்பு சக்கரங்களுக்கிடையே மரக்கட்டைகள் சிக்கின
  • ரெயில் கவிழ்ப்பு சதிவேலைகள் குறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவது

ரெயிலை கவிழ்க்கும் சதி வேலைகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ரெயில்வே தண்டவாளங்களில் கம்பிகளை வைப்பது, கேஸ் சிலிண்டர்களை வைப்பது என மர்ம நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறனர். பலரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்த விவகாரங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

 

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு ரெயில் கவிழ்ப்பு சதி அரங்கேறியுள்ளது. டெல்லி லக்னோ இடையே ஓடும் பரைலி - வாரணாசி எக்ஸ்பிரஸ் [14236 ] ரெயில் வழித்தடத்தில் செல்லும்போது அங்கே போடப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் மீது இடித்துள்ளது.  

ரெயிலின் இரும்பு சக்கரங்களுக்கிடையே அவை சிக்கியதால் சில தூரத்துக்கு ரெயிலானது அவற்றை இழுத்துக்கொண்டு சென்றுள்ளது. நிலைமையை சமாளித்துக்கொண்டு ரெயில் ஓட்டுநர் பாதுகாப்பாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

எனவே ரெயில் சேவையில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த தடத்தில் செல்லும் மற்ற ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் மரக்கட்டையை அங்கிருந்து அகற்றினர்.

தடிமனான அந்த மரக்கட்டைகள் இரண்டும் 10 கிலோவுக்கும் அதிகமாக எடை கொண்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற ரெயில் கவிழ்ப்பு சதிவேலைகள் குறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News