இந்தியா

கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை - சித்தராமையா

Published On 2024-07-17 03:40 GMT   |   Update On 2024-07-17 08:24 GMT
  • கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
  • கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும்

கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News