இந்தியா

இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

Published On 2024-07-15 03:28 GMT   |   Update On 2024-07-15 03:28 GMT
  • இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது.
  • மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Tags:    

Similar News