உ.பியில் மினி லாரி மீது பேருந்து மோதி விபத்து- 12 பேர் உயிரிழப்பு
- விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
- நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் மினி டிரக் மீது பேருந்து மோதிய ஏற்படுத்திய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நெடுஞ்சாலை 93ல் இன்று பேருந்து ஒன்று மினி லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
பயணிகள் ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சேவாலா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த மினி லாரி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்தை தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) நிபுன் அகர்வால் கூறுகையில், "ஆக்ரா- அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது" என்றார்.
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.