படுத்துக்கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட சிறுவன்- தொண்டையில் சிக்கி உயிரிழந்த சோகம்
- சிறுவனின் பெயர் அமித் சிங் என அடையாளம் காணப்பட்டார்.
- பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் நேற்று வீட்டில் தனது படுக்கையில் சென்போனில் கேம் விளையாடியபடி, ரசகுல்லா (இனிப்பு) சாப்பிட்ட 17 வயது சிறுவன் இனிப்புதொண்டையில் அடைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வெளியான தகவல்களின்படி, சம்பவத்திற்குப் பிறகு சிறுவன் சில நிமிடங்களுக்கு மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். பிறகு, உயிர் இழந்துள்ளான். அந்த சிறுவனின் பெயர் அமித் சிங் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெளி ஊரில் வேலைசெய்துவிட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் மாமா ரசகுல்லா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளான். அப்போது, ரசகுல்லா சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது. அப்போது, சிறுவன் மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்த அமித் சிங்கின் மாமா ரஸ்குல்லாவை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.
அதன்பிறகு, சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு மீட்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ரசகுல்லா சாப்பிட்டு உயிரிழந்த சிறுவனின் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.