செய்திகள் (Tamil News)

இந்தியாவில் சைவ மாத்திரைகள் விரைவில் தயாரிப்பு

Published On 2016-04-10 07:30 GMT   |   Update On 2016-04-10 07:30 GMT
இந்தியாவில் சைவ மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு வருகிறது.

புதுடெல்லி:

உணவு வகைகளில் சைவம் மற்றும் அசைவம் உள்ளது. அதுபோன்று தற்போது சைவ மாத்திரையும் தயாரிக்கப்பட்டு அது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தற்போது பெரும்பாலான மாத்திரைகள் விலங்குகளின் ‘ஜெலடின்’ எனப்படும் ஊண் பசை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரத்தாது மூலம் சைவ மாத்திரைகள் தயாரிக்கப்பட உள்ளன.

அதற்கான ஆய்வு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தகவலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஜி.என்.சிங் தெரிவித்துள்ளார்.

மருந்து மொத்த விற்பனையாளர்கள், மருந்து கம்பெனிகள் மற்றும் நுகர்வோர்களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த இறுதிகட்ட முடிவு மே மாத இறுதிக்குள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தாது மூலம் சைவ மாத்திரைகள் தயாரிக்கும் சட்ட வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Similar News