செய்திகள் (Tamil News)

கேரள சட்டசபை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 43.88 சதவீதம் வாக்குகள் பதிவு

Published On 2016-05-16 08:13 GMT   |   Update On 2016-05-16 08:13 GMT
கேரள சட்டசபை தேர்தலில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி சுமார் 43.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள சட்டசபை தேர்தலில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி சுமார் 43.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 140 தொகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி உம்மன் சாண்டி, கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, மத்திய முன்னாள் மந்திரி சசிதரூர், மாநில பா.ஜ.க. தலைவர் ஓ.ராஜகோபால், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இன்று பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 43.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் உம்மன் சாண்டி போட்டியிடும் கோட்டயம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தலைநகர் திருவனந்தபுரத்தில் மிககுறைந்தபட்சமாக 36.14 சதவீதம் வாக்குகளே பதிவானது.

இதர மாவட்டங்களான காசர்கோட்டில் 44.06 சதவீதம், கண்ணூரில் 47.61 சதவீதம், வயநாட்டில் 41.62 சதவீதம், மலப்புரத்தில் 42.41 சதவீதம், பாலக்காட்டில் 44.42 சதவீதம், திரிச்சூரில் 44.73 சதவீதம், எர்ணாகுளத்தில் 43.64 சதவீதம், இடுக்கியில் 40.05 சதவீதம், ஆலப்புழாவில் 45.27 சதவீதம், பத்தனம்திட்டாவில் 40.90 சதவீதம், கொல்லம் மாவட்டத்தில் 42.80 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

Similar News