செய்திகள் (Tamil News)

செல்போன் அழைப்பு முறிவு பிரச்சினை: நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தகவல்

Published On 2016-06-14 18:34 GMT   |   Update On 2016-06-14 18:34 GMT
செல்போன் அழைப்பு முறிவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

செல்போன் அழைப்பு முறிவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தண்டனை கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அழைப்பு முறிவு பிரச்சினையை சரிசெய்யாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி அபராதமும், 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும் விதிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் என்ற எம்.பி.யும் இதை வலியுறுத்தி, மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகருக்கு ரவிசங்கர் பிரசாத் எழுதி உள்ள பதிலில், ‘நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஏற்கனவே உள்ளன. எனவே, அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அளிக்க இப்போது அவசியம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Similar News