செய்திகள் (Tamil News)

உத்தரபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Published On 2016-06-28 19:11 GMT   |   Update On 2016-06-28 19:11 GMT
உத்தரபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

நொய்டாவில் உத்தரபிரதேச மாநில சிறப்பு அதிரடி படையினர் முனீர் என்பவரை கைது செய்தனர். இவர் தேசிய புலனாய்வு நிறுவன துணை கண்காணிப்பாளர் தன்ஷில் அஹ்மத் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ளவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தன்ஷில் அஹ்மத் பதான்கோட் தாக்குதல் வழக்கின் விசாரணை குழுவில் இடம்பெற்றவர்.

கைது செய்யப்பட்ட முனீரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முனீர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.2 லட்சம் சம்மானம் அளிக்கப்படும் என உத்தரபிரதேசம் போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் தன்ஷில் அஹ்மது திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிய போது முனீரின் சதி ஆலோசனை பேரில் மோட்டர் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தன்ஷில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தன்ஷில் அஹ்மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News