செய்திகள் (Tamil News)

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் புதிய குடோன்கள்: அமேசான் முடிவு

Published On 2016-07-07 12:56 GMT   |   Update On 2016-07-07 12:56 GMT
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், சென்னை உள்ளிட்ட ஆறு இடங்களில் புதிதாக குடோன்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

இ-காமர்ஸ் துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் ஆன் லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் புதிதாக ஆறு இடங்களில் குடோன்களை அமைக்க முடிவு செய்துள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை ஆகிய இடங்களில் புதிய குடோன்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த புதிய குடோன்கள் 2.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளன.

பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிக்கும் வகையில் தானியங்கி தொழில்நுட்பங்கள் நிறைந்த புதிய குடோன்களை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் பொருட்களை விநியோகம் செய்ய அமேசான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Similar News