செய்திகள் (Tamil News)

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே 18 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

Published On 2016-10-16 14:31 GMT   |   Update On 2016-10-16 14:31 GMT
இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே 18 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை எல்லை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அமிர்தசரஸ்:

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் பெரும்பகுதி பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இந்தியாவிற்குள் பாகிஸ்தானில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இதை உன்னிப்பாக கவனித்து வரும் எல்லை பாதுகாப்பு படையினர் அவ்வப்போது கோடிக்கணக்கான ரூபாய் அளவில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி எல்லைக்கோடு அருகே உள்ள புல்மோரன் புறக்காவல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் வயல்வெளியில் உள்ள வைக்கோல் படப்பை சோதனையிட்டனர். அப்போது அதற்குள் 7 பாக்கெட் ஹெராயின் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே, பாதுகாப்புப் படையினர் அதை கைப்பற்றினர். அதன் மொத்த எடை 3.75 கிலோ எடை இருந்ததாக கூறினர். சந்தை மதிப்பில் அதன் மதிப்பு சுமார் 18.75 கோடி ரூபாய் ஆகும். ஆனால், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக யாரையும் அதிகாரிகள் கைது செய்யவில்லை.

Similar News